ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 22 மே 2019 (14:09 IST)

அவரைப் பிரதமர் ஆக்குங்கள் – காங்கிரஸூக்கு மம்தா வைத்த செக் !

காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த எதிர்க்கட்சி தலைவர்களின் சந்திப்பில் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவாதமும் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நேற்று டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் அகமது படேல், குலாம் நபி ஆசாத், அசோக் கெலாட், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் கலந்துகொண்டனர். திமுகவின் சார்பில் கனிமொழி, தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் சந்திரபாபு நாயுடு, பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் சதீஷ் சந்திர மிஷ்ரா, சிபிஎம் சார்பில் சீதாராம் யெச்சூரி, சிபிஐ சார்பில் டி.ராஜா, ஆம் ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால், திருணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெரிக் ஓ பிரைன், சமாஜ்வாதி ராம்கோபால் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மனோஜ் ஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் மஜீத் மேமன், தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் தேவிந்தர் சிங் ராணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கும் விடை தேடும் விதமாக விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் காங்கிரஸ்  கட்சியின் ராகுல் காந்தி பிரதமராக வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாநிலக் கட்சியின் உதவியோடுதான் ஆட்சியமைக்க முடியும் என்ற சூழல் உள்ளதால் மாநிலக் கட்சிகள் பரிந்துரைக்கும் ஒருவரையே பிரதமராக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸும் உள்ளது.

அதனால் மம்தா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப சிதம்பரத்தை பிரதமர் வேட்பாளராக அறிவிக்குமாறு வற்புறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.