புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2024 (13:28 IST)

கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கிய மம்தா.! மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை.!!

Mamtha
மேற்கு வங்கத்தில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில், மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் 32 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக பத்து இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
 
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று நாடு முழுவதும்  எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆளும் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பாஜகவே மேற்கு வங்கத்தை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

குறிப்பாக, ஏபிபி -C வோட்டர் எக்ஸிட் போலில், பாஜக 23 முதல் 27 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் 13 முதல் 17 இடங்கள் வரை மட்டுமே வெல்லும் என்றும் கணிக்கப்பட்டது. ஆனால், இந்த கணிப்புகளை மம்தா கடுமையாக விமர்சித்திருந்தார்.. இந்த கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்னாடியே, வீட்டில் உட்கார்ந்து தயாரிக்கப்பட்டவை என்று மம்தா கூறியிருந்தார்.
 
தற்போது மம்தா கூறியதைப் போன்று மேற்குவங்கத்தில் கருத்துக்கணிப்புகள் எல்லாம் பொய்யாக்கிவிட்டது. மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 32 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக பத்து இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால், முன்னிலை நிலவரங்கள் மாறக்கூடும் என தெரிகிறது.