1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2023 (13:25 IST)

2 ஆஸ்கர் விருதும் தென்னிந்தியர்களின் உழைப்பு.. மத்திய அரசுக்கு சம்பந்தமில்லை: மல்லிகார்ஜுன கார்கே

Mallikarjun Kharge
இந்தியாவுக்கு கிடைத்த இரண்டு ஆஸ்கார் விருதுகளும் தென்னிந்தியர்களுக்கு கிடைத்த உழைப்பின் பலன் என்றும் அதை மத்திய அரசு தனது பெருமையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவையில் பேசி இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் பிரதமர் மோடி உள்பட பல பாஜகவினர் இந்தியாவுக்கே இது பெருமை என்று தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்கள் அவையில் இது குறித்து பேசிய போது ஆஸ்கர் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் படத்தை பிரதமர் மோடி தான் இயக்குனர் என மோடி அரசாங்கம் பெருமை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று கூறினார் 
 
மேலும் இது தென்னிந்தியர்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் அதில் அவர்கள் தான் அதிகம் பெருமை கொள்வார்கள் என்றும் நானும் பெருமை கொள்வேன் என்றும் தெரிவித்தார். நீங்களும் இதற்காக பெருமை கொள்ளலாம் ஆனால் மத்திய அரசு அதன் பெருமையை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் இது முழுக்க முழுக்க தென் இந்தியர்களுக்கான பெருமை என்றும் அவர் தெரிவித்தார். கார்கேவின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran