செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 2 டிசம்பர் 2019 (08:20 IST)

மருத்துமனையில் நோயாளியிடம் அத்துமீறிய பணியாளர் !

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளியிடம் பணியாளர் ஒருவர் தவறாக நடந்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் அமைந்துள்ளது அந்த தனியார் மருத்துவமனை. அங்கே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அப்போது அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு இருந்ததால் அரைமயக்க நிலையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஆண் செவிலியர் ஒருவர் அவரின் ஆடைகளைக் கலைந்து பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். மயக்கத்தில் இருந்ததால் அந்த பெண்ணால் அந்த நபரை எதிர்க்க முடியவில்லை

மயக்கம் தெளிந்ததும் அந்த பெண் தனது கணவரிடம் சொல்லியுள்ளார். இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அந்த ஆண் செவிலியரின் மேல் சட்டப்பிரிவு 354ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது ஹரியானாவில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.