செவ்வாய், 24 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2016 (22:00 IST)

மகாத்மா காந்தியின் பேரன் கனு காந்தி காலமானார்

மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தி உடல் நலக்குறைவு காரணமாக குஜராத் மாநிலம் சூரத் நகரில் இன்று காலமானார். பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.


 


 
உப்பு சத்தியாகிரகத்தின்போது காந்தியின் தடியை பிடித்துக்கொண்டு முன்னால் ஒரு சிறுவன் செல்வான். இந்த புகைப்படம் காந்தியின் அரிய புகைப்படங்களில் ஒன்று. அந்த சிறுவன் காந்தியின் பேரன் கனு காந்தி. இவர் 2014ஆம் ஆண்டு தனது மனைவியுடன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்தனர்.
 
இந்தியாவில் இவர்களுக்கென்று சொத்து எதுவும் இல்லாததால், ஒரு இடத்தில் தங்காமல் வெவ்வேறு இடங்களில் தங்கி வந்தனர். சிறிது காலத்திற்கு பின் இவர்கள் இருவரும் முதியோர் இல்லத்தில் சேர்ந்தனர்.
 
பின்னர் டெல்லியில் உள்ள குரு விஷ்ரம் விருத் என்ற ஆசிரமத்திற்கு சென்றனர். இவர்கள் இருவரும் முதியோர் இல்லத்தில் தங்கியிருப்பது, ஊடகங்களில் செய்தியாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்த கனு காந்தி தனது 87 வயதில் இன்று சூரத் நகரில் காலமானார். அவரது மனைவிக்கு தற்பொது 90 வயது. இவருக்கு வயதானதால் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் காது கேளாமல் உள்ளார். கனு கந்தி இறப்புக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
மேலும் மகாத்மா காந்தியின் பேரன் கானுபாய் காந்தியின் மறைவு என்னை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடனான பல்வேறு உரையாடல்களை நான் நினைவு கூர்ந்து பார்க்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும், என்று தெரிவித்துள்ளார்.