வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (12:04 IST)

சிவா சிவாய போற்றியே!! சிவாலயங்களில் விண்ணை முட்டும் கோஷம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டில் உள்ள சிவாலயங்களில் இன்று சிவபெருமானை தரிசிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் உள்ளனர்.

ஹிந்து மதத்தின் முக்கிய கடவுளான சிவனுக்கு அதிக அளவில் பக்தர்கள் உள்ளனர் நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படும் நிலையில், இன்று காலை முதலே சிவாலயங்களில் பக்தர்கள் அதிக அளவில் குவிய ஆரம்பித்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் ஆலயம், உஜ்ஜைன் மகா காளேஸ்வரர் ஆலயம், அமிர்தசரஸ் ஷிவாலா பாக் பையான் கோவில், உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய சிவன் ஸ்தலங்களில் பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சிவனை தரிசித்து வருகின்றனர்.

அதே போல் தமிழகத்தில் ஈஷா யோகா மையத்தில் இன்று மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற உள்ளது.