1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 30 ஜூன் 2022 (16:05 IST)

மகாராஷ்டிராவின் முதல்வர், துணை முதல்வர் இவர்களா?

bjp flag
மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ்தேவ் தாக்கரே பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அம்மாநிலத்தின் புதிய முதல்வர் மற்றும் துணை முதல்வர் இன்று பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பிருப்பதாகவும் முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்க இருப்பதாக கூறப்படுகிறது.
 
அதேபோல் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே துணை முதலமைச்சராக பதவி ஏற்கவிருப்பதாகவும் இவர்களுடன் சில அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
 கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இன்றுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.