ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (11:28 IST)

அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கருக்கு இறுதி சடங்கு! – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!

உடல்நலக் குறைவால் மறைந்த பாடகி லதா மங்கேஷ்கருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவில் மிகவும் முதுபெரும் பிண்ணனி பாடகிகளில் முக்கியமானவர் லதா மங்கேஷ்கர். இந்தி, பெங்காலி, தமிழ், கன்னடம் என பல்வேறு இந்திய மொழிகளிலும் பல ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். மும்பையில் வசித்து வரும் லதா மங்கேஷ்கருக்கு கடந்த ஜனவரி 8 ஆம் தேதி கொரொனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒரு மாதமாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர் தற்போது காலமானார். அவரது இழப்பு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரது மறைவிற்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இரங்கல் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாடகி லதா மங்கேஷ்கரின் உடலுக்கு இறுதி சடங்கு மகாராஷ்டிர மாநில அரசின் மரியாதையோடு நடத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. லதா மங்கேஷ்கரின் மறைவை தொடர்ந்து 2 நாள் தேசிய துக்கமாக அனுசரிக்கப்படுவதாக கூறியுள்ள மத்திய அரசு, நாடு முழுவதும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவித்துள்ளது.