திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 25 மார்ச் 2023 (18:42 IST)

ராகுல் காந்தி இவ்வாறு பேசினால், சாலையில் நடமாட முடியாது: முதலமைச்சர் எச்சரிக்கை..!

ராகுல் காந்தி இவ்வாறு தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினால் சாலையில் நடமாட முடியாது என மகாராஷ்டிரா மாநில முதல்வர் எச்சரிக்கை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் வழக்கு தொடரப்பட்டது என்பதும், இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ராகுல் காந்திக்கு பல எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவளித்து வரும் நிலையில் மகராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். ராகுல் காந்தி தொடர்ச்சியாக இவ்வாறு பேசினால் சாலையில் நடமாடுவது கடினம் என்றும் ராகுல் காந்தி பிரதமர் மோடியை மட்டும் விமர்சிக்கவில்லை, ஒட்டுமொத்த பிற்பட்ட சமூகத்தையே அவர் அவதூறாக பேசி உள்ளார் என்றும் தெரிவித்தார். மகாராஷ்டிரா சட்டசபையில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இவ்வாறு பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran