செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 9 அக்டோபர் 2020 (14:26 IST)

அவருக்கு விவசாயத்தை பத்தி ஒரு வெங்காயமும் தெரியாது! – ராகுல் காந்தி குறித்து முதல்வர்!

ராகுல் காந்தி பிரதமர் மோடியின் வீடியோ குறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில், ராகுல்காந்தி குறித்து மத்திய பிரதேச முதல்வர் பேசியுள்ளது வைரலாகியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் மசோதாவை எதிர்த்து வரும் ராகுல் காந்தி கிராமம் கிராமமாக சென்று இதுகுறித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் டென்மார்க் அதிகாரி ஒருவரோடு பிரதமர் மோடி பேசிய வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி ” இந்தியாவிற்கு மிகப்பெரும் ஆபத்தே பிரதமருக்கு எதுவும் புரிவதில்லை என்பதல்ல. சுற்றியிருப்பவர்களும் அவருக்கு அதை சொல்ல தைரியம் இல்லாமல் இருப்பதுதான்” என கூறியுள்ளார்.

பிரதமருக்கு காற்றாலை தொழில்நுட்பம் குறித்து தெரியாது என்பது போல ராகுல் காந்தி பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் அவர் பேசியது உண்மை என்பதற்கான ஆதாரங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராகுல்காந்தி குறித்து பேசியுள்ள மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் “காங்கிரஸ் ஆட்சியில்தான் மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் ஏமாற்றப்பட்டனர். ராகுல் காந்தி ட்ராக்டரில் சோபாவை போட்டு சொகுசாக செல்கிறார். அவருக்கு விவசாயம் பற்றி ஒன்றுமே தெரியாது. வெங்காயம் மண்ணுக்கு மேல் முளைக்குமா, தரைக்கு அடியில் முளைக்குமா என்பது கூட அவருக்கு தெரியாது” என்று கூறியுள்ளார்.