ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 8 ஜனவரி 2019 (07:41 IST)

உணவு பொட்டலத்தில் மது பாட்டில்: பாஜக பிரமுகரின் நிகழ்ச்சியில் பரபரப்பு

பாஜக பிரமுகர் ஒருவர் நடத்திய கோவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட உணவு பொட்டலத்தின் உள்ளே மதுபாட்டில் இருந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உபி மாநிலத்தில் பாஜக பிரமுகர் நரேஷ் அகர்வாலின் மகன் நிதின் அகர்வால் நடத்திய கோவில் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டது. இந்த பொட்டலத்தை பிரித்து பார்த்த பலருக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் அந்த உணவு பொட்டலத்தின் உள்ளே மது பாட்டில் இருந்தது.

இந்த உணவு பொட்டலத்தை பிரித்த பெற்றோர்களுடன் வந்திருந்த ஒருசில இளைஞர்களுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மதுபாட்டிலுடன் கூடிய உணவு பொட்டலங்கள் சில மைனர்களுக்கும் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உபி மாநில பாஜக தலைமை விசாரணை மேற்கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.