வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 27 ஜூன் 2019 (20:40 IST)

இடி மின்னல் தாக்கி மக்கள் 30 பேர் உயிரிழப்பு ! அதிர்ச்சி தகவல்

இந்தியா மூன்று பக்கம் கடல்களாலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. அதனால் நம் நாட்டில்  குளிர் ,வெப்பம் ஆகிய  பருவ காலங்கள் மாறி மாறி வருகின்றது.  ஆனால் மழை பெய்ய வேண்டிய உரிய பருவகாலத்தில் பொய்த்துபோவதுதான் மக்களை பெரிதும் பாதிக்கிறது. 
வழக்கமாக ஜூன் மாதத்தில் பெய்ய வேண்டிய தென்மேற்குப் பருவமழையானது, செப்டம்பர் வரை இருக்கும். அதனால் விவசாயத்திற்கு போதுமான மழையும் தாராளமாகக் கிடைக்கும்.ஆனால் இந்த முறை தென்மேற்குப் பருவமழையானது பொய்த்துவிட்டது.
 
இருப்பினும் ஒரு சில இடங்களில் மழை பெய்துவருகிறது, கடும் வெய்யில் அடித்த சென்னையிலும் சில நாட்களாக மழை பெய்துவருகிறது.மற்ற மாநிலங்களிலும் மழை பெய்துவருகிறது.
 
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பீகார் மாநிலத்தில் பெய்த மழையின் போது, இடி மின்னல் தாக்கியதில் 30 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகிறது.மேலும் 12 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.இந்த தகவலை அம்மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
மின்னல் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அரசு தலா ரூ. 4 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.