இந்தி மொழியில் இருந்த எல்.ஐ.சி. இணையதளம்: மீண்டும் ஆங்கில மொழிக்கு மாற்றம்..!
இன்று காலையில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் இணையதள முகப்பு முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது. மேலும் மொழி என்பதை குறிக்கும் "பாஷா" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே ஆங்கில பக்கத்திற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது
இந்தி மொழியில் மாற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்ஐசி நிறுவனத்தின் இணையதளம் முழுமையாக ஹிந்தியில் மாற்றப்பட்டதற்கு தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் எல்ஐசி பாலிசிதாரர்கள் பலர் சமூக வலைதளத்தில் இந்த நிலை நீடித்தால் எல்ஐசி பாலிசியை கேன்சல் செய்ய வேண்டிய நிலை வரும் என்று பதிவு செய்தனர்.
இதனை அடுத்து, எல்ஐசி நிறுவனத்தின் இணையதளத்தில் தற்போது மீண்டும் ஆங்கிலத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா போன்ற பல மொழிகள் பேசும் ஒரு நாட்டில், வாடிக்கையாளர்களை மட்டுமே நம்பி உள்ள எல்ஐசி நிறுவனம் ஒரே ஒரு மொழிக்கு முக்கியத்துவம் தந்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், எல்ஐசி நிறுவனத்தின் மேல் பொதுமக்கள் மற்றும் பாலிசிதாரர்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Edited by Mahendran