1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 5 ஜூலை 2018 (22:42 IST)

கிரிக்கெட் சூதாட்டம் சட்டபூர்வமாகிறதா?

கிரிக்கெட் சூதாட்டம் உள்பட ஒருசில சூதாட்டங்களை சட்டபூர்வமாக்கலாம் என  மத்திய சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இந்த பரிந்துரைக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
 
இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டம் என்பது சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. காவல்துறை இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் நாளுக்கு நாள் சூதாட்டம் அதிகரிக்கின்றதே தவிர குறைந்தபாடில்லை
 
இந்த நிலையில் கிரிக்கெட் சூதாட்டம் மற்றும் சில வகை பந்தயங்களின் வழியாக கருப்புப்பணம் மற்றும் ஹவாலா பணம் ஆகியவை பெரும்பாலும் புழங்கி வருகிறது. இதனால்  சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என மத்திய சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
 
பான் கார்டு, ஆதார் எண் ஆகிய ஆதாரங்கள் பெற்று முழுவதும் பணமில்லா பரிவர்த்தனை செய்து சூதாட்டம் நடத்த அனுமதித்தால் கருப்புப்பணத்தை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும் என அந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.