திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 20 மார்ச் 2020 (09:39 IST)

ஒரு தாயாக இந்த தண்டனையை வரவேற்கிறேன் – நடிகை குஷ்பு கருத்து !

நடிகை குஷ்பு நிர்பயா கொலை குற்றவாளிகளின் தண்டனையை வரவேற்பதாக சொல்லியுள்ளார்.

நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளான அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு தூக்கு தண்டனை நீதிமன்றத்தால்விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்க முக்கிய காரணம் நிர்பயாவின் அம்மா ஆஷா தேவி என்பவர் தான் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. 

இந்நிலையில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு ‘ஏன் இத்தனை ஆண்டுகள் அவர்களிடம் இவ்வளவு கனிவான போக்கை கையாண்டோம்? இம்மாதிரியான குற்றங்களுக்கு ஒரு துளி கூட கருணை காட்ட முடியாது. ஒரு தாய் என்ற முறையில் இந்த முடிவை வரவேற்கிறேன். ’ எனக் கூறியுள்ளார்.