திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 20 மே 2017 (15:44 IST)

பலாத்காரம் செய்ய முயன்ற பூசாரியின் ஆண் உறுப்பில் கத்தியால் குத்திய இளம்பெண்

கேரளாவில் பலாத்காரம் செய்ய முயன்ற பூசாரியின் ஆண் உறுப்பில், இளம்பெண் கத்தியால் குத்தினார்.


 

 
கேரளா மாநிலம் கொல்லம் அருகே உள்ள பன்மன் ஆஸ்ரமத்தில் பூசாரியாக இருப்பவர் ஹரி சுவாமி. அவர் அருகில் இருக்கும் வீடுகளுக்கு சென்று பூஜை செய்வது வழக்கம்.
 
அதோபோல் ஒரு வீட்டிற்கு பூஜை செய்ய சென்றுள்ளார். அங்கிருந்த இளம்பெண்ணை தவறாக பார்த்ததோடு, ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த இளம்பெண் தனியாக வீட்டில் தனியாக இருந்த வேளையில் பூசாரி அந்த இளம்பெண்னை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
 
அப்போது அந்த இளம்பெண், பூசாரியின் ஆண் உறுப்பில் கத்தியால் குத்தியுள்ளார். வலியில் துடித்த பூசாரி சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பூசாரியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து அந்த பூசாரி காவல்துறையினர் பலாத்காரம் வழக்கு பதிவு செய்தனர். 
 
மேலும் அந்த் இளம்பெண்ணின் தைரியத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டியுள்ளார். இந்த பாராட்டை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.