புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 14 டிசம்பர் 2019 (08:15 IST)

கள்ளக்காதலை முறித்து மனம் மாறிய பெண் – 31 இடத்தில் கத்திக்குத்து வாங்கி உயிரிழந்த சோகம் !

கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவரை அவரது முன்னாள் கள்ளக் காதலர் சாலையில் வைத்துக் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள அஞ்சுமுக்கு எனும் பகுதியைச் சேர்ந்தவர் ஷைலா. இவரது கணவர் வெளிநாட்டில் வேலைப் பார்த்து வருகிறார். ஷைலாவுக்கும் லாரி ஓட்டுனர் அனிஷ் என்பவருக்கும் திருமணம் மீறிய மறை உறவு இருந்துள்ளது. இது வெளி நாட்டில் இருக்கும் அவர் கணவருக்குத் தெரியவந்துள்ளது.

இதனால் அவர் ஷைலாவை விவாகரத்து செய்ய முயல, குழந்தைகளின் எதிர்காலத்துக்காக தனது கள்ளக்காதலை முறித்துக் கொள்ள முடிவு செய்தார் ஷைலா. இதனால் அனிஷுக்கு பேரதிர்ச்சியைத் தந்துள்ளது. அவர் பலமுறை போன் செய்தபோதும் ஷைலா அதை எடுக்காமல அவர் புறக்கணித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் ஷைலா தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்தபோது அவரை மறித்த அனிஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாகக் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

31இடங்களில் கத்திக்குத்து வாங்கிய ஷைலா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துள்ளார்.