வாக்குசாவடிக்குள் புகுந்த தண்ணீர்: தத்தளிக்கும் மக்கள்!

Sugapriya Prakash| Last Updated: திங்கள், 21 அக்டோபர் 2019 (14:53 IST)
கேரளாவில் பெய்து வரும் மழையால் வாக்குசாவடிக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 
 
கேரளாவில் ஏர்ணாகுளம் உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அதிலும், எர்ணாகுளம் தொகுதியில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் முழன்கால் அளவுக்கு தண்ணீர் நிற்கிறது. 
 
இருப்பினும் மழை சிரமத்தை பொருட்படுத்தாமல் மக்கள் தங்களில் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இதனிடையே மழையால் பாதிக்கப்பட்டுள்ள எர்ணாகுளத்தில் வாக்குபதிவை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட போதும், கேரள தலைமை அதிகாரி இதனை நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :