செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 3 ஜூலை 2018 (11:01 IST)

சமூக வலைத்தளங்களில் வைரலான பாடகர் : விரைவில் சினிமாவில் பாடுகிறார்

சமூக வலைத்தளங்களில் வைரலான கேரள வாலிபரை இசையமைப்பாளர் மற்றும் பாடகர் சங்கர் மகாதேவன் தேடிக்கண்டுபிடித்து வாய்ப்புகளை வழங்கியுள்ளார்.

 
கடந்த சில நாட்களாக டிவிட்டர்  மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலத்தளங்களில் கேரளாவை சேர்ந்த ராகேஷ் உன்னி என்கிற விவசாயி மற்றும் பாடகர், சங்கர் மகா தேவன் பாடிய பாடல்களை பாடிய வீடியோ வைரலானது. அவரின் குரல் மிகவும் இனிமையாக இருந்ததால் பலரும் அவரது வீடியோவை ரீடிவிட் செய்தனர்.
 
இந்த வீடியோவை பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் பார்த்துவிட்டு, யார் இவர்? இவரோடு பணிபுரிய வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். இவரை யாரேனும் கண்டுபிடித்துக்கொடுங்கள் என தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

 
அதையடுத்து அந்த பாடகர் பற்றிய தகவல் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவரின் சங்கர் மகாதேவன் தொலைப்பேசியில் பேசியுள்ளார். மேலும், விரைவில் இருவரும் சேர்ந்து பாடுவோம் எனவும் அவருக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.
 
இதையடுத்து, இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட ராகேஷ், எனக்கு பிடித்தமான சங்கர் மகாதேவனிடம் பேசினேன். சந்தோஷமாக இருக்கிறேன் எனக்கூறிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக சங்கர் மகாதேவன் பாடிய ஒரு பாடலை பாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.