1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2022 (15:06 IST)

உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டாம்: ரூ.25 கோடி லாட்டரி பரிசு பெற்றவருக்கு அட்வைஸ்!

lottery
கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடந்த ஜாக்பாட் லாட்டரியில் 25 கோடி பரிசு பெற்ற ஆட்டோ டிரைவருக்கு கடந்த ஆண்டு இதே ஓணம் பண்டிகை குலுக்களில் வெற்றி பெற்ற நபர் உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டாம் என அட்வைஸ் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பு லாட்டரி குலுக்கல் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் ஆட்டோ டிரைவர் அனுப் என்பவருக்கு ரூபாய் 25 கோடி பரிசு கிடைத்தது
 
இந்த நிலையில் கடந்த ஆண்டு இதே ஓணம் குலுக்களில் 12 கோடி ரூபாய் பரிசு பெற்ற ஒருவர் இந்த ஆண்டு பரிசு பெற்றவருக்கு அட்வைஸ் செய்துள்ளார். தயவுசெய்து உறவினர்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்ய வேண்டாம் என்றும் ஒரு உறவினர்களுக்கு கொடுத்துவிட்டு இன்னொரு உறவினருக்கு கொடுக்கவில்லை என்றால் பெரும் சிக்கல் ஏற்படும் என்றும் என் அனுபவத்தில் நான் கூறுவதை கேட்கவும் என்று கூறியுள்ளார் 
 
மேலும் பரிசு தொகை கிடைத்த பணத்தை அப்படியே பிக்சட் டெபாசிட் போட்டுவிட்டு நிம்மதியாக இருக்கவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.