திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (08:49 IST)

இன்று முதல் பேருந்து கட்டணம் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

இன்று முதல் பேருந்து கட்டணம் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக இன்று முதல் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக கேரள மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
கேரள மாநில அரசு போக்குவரத்து மற்றும் தனியார் பேருந்துகளின் கட்டணம் இன்று முதல் எட்டு ரூபாயிலிருந்து 10 ரூபாயாக உயர்த்த போவதாக அறிவித்துள்ளார் 
 
மேலும் கேரள அரசு பேருந்துகளில் ஒரு கிலோமீட்டருக்கு 90 பைசாவிலிருந்து ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டதாகவும் அவர் அறிவித்துள்ளார் 
 
பேருந்துகள் மட்டுமின்றி ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது ஆட்டோக்கள் குறைந்த கட்டணம் ரூபாய் 25 என்று இருந்த நிலையில் இனி 30 ஆக உயர்த்த படுவதாகவும் டாக்ஸியில் குறைந்த கட்டணம் 175 ரூபாய் என இருந்த நிலையில் இனி 200 ஆக உயர்த்தப்பட்டது உள்ளதாகவும் கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்