திங்கள், 24 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 24 மே 2022 (16:09 IST)

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்: கர்நாடக பெண்ணுக்கு உறவினர்கள் வாழ்த்து!

four babies
ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்: கர்நாடக பெண்ணுக்கு உறவினர்கள் வாழ்த்து!
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்ததை அடுத்து அந்த பெண்ணுக்கு அவருடைய உறவினர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள அல்மாஜ் பானு என்ற பெண் கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமான நிலையில் சமீபத்தில் அவருக்கு பிரசவ வலி வந்தது. இதனை  அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் பிரசவம் பார்த்தனர்.
 
அப்போது ஒன்றன்பின் ஒன்றாக குழந்தைகள் வந்து கொண்டே இருந்தது. மொத்தம் அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 2 ஆண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகளை பெற்ற அல்மாஜ் பானு நலமுடன் இருப்பதாகவும் நான்கு குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து அந்த பெண்ணுக்கு உறவினர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்