1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (11:11 IST)

கர்நாடக பள்ளி பாட புத்தகத்தில் சாவர்க்கர் பாடம்: பெரும் சர்ச்சை!

savarkar
கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி பாடப்புத்தகத்தில் சாவர்க்கர் பாடம் இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
கர்நாடக மாநிலத்தில் எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் காலத்தை வென்றவர்கள் என்ற பகுதி உள்ளது
 
இதில் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது பறவையின் சிறகுகளில் அவர் இந்தியாவுக்குச் சென்றார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது
 
இந்த குறிப்பு கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியையும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்பதும் சாவர்க்கர் குறித்த குறிப்பை பாடப்புத்தகத்தில் நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது 
 
ஆனால் கர்நாடக மாநிலத்தை ஆட்சி செய்து வரும் பாஜக இதற்கு செவிசாய்க்கவில்லை என்று கூறப்பட்டு வருகிறது.