வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 6 நவம்பர் 2018 (14:20 IST)

கர்நாடகா மாநில இடைத்தேர்தல் முடிவுகள்...

கர்நாடகா மாநிலத்தில் மூன்று லோக்சபா மற்றும் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன. இதில் 4 இடங்களில் காங்கிரஸ் குமாரசாமி கூட்டணியினர் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
ஷிவமொகா,பல்லாரி மாண்டியா ஆகிய முன்று லாக்சபா தொகுதிகளான ராம் நகர்,ஜமகண்டி  ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 3 ஆம்தேதி  இடைத்தேர்தல்  நடைபெற்றது.
 
இதனையடுத்து ஓட்டு பெட்டிகள் பத்திரமாக ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
 
இந்நிலையில் அன்று பதிவான ஓட்டுகள் இன்று காலையில் எண்ணப்பட்டன.
இதன் முடிவில் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதாதளம்,ராம்நகர் தொகுதிகளையும் காங்கிரஸ் ஜாம்கண்டி,பெல்லாரி ஆகிய தொகுதிகளையும் பிடித்தது. ஷிவகோமாவில் பா.ஜ.க ஜெயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.