1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2016 (19:10 IST)

‘எனக்கே லஞ்சம் கொடுக்க முயன்றார்கள்’ - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரவேண்டும் என்பதற்காக, தனக்கேலஞ்சம் கொடுக்க முயற்சி நடந்ததாக கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
 

 
கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் எஸ்.கே. முகர்ஜி. இவர் கடந்த செவ்வாய்க்கிழமை சொத்து தகராறு தொடர்பான வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார்.
 
அப்போது, தனக்கு நேர்ந்த அதிர்ச்சி என்று அவராகவே தகவல் ஒன்றை வெளியிட்டார். இதில் லஞ்சம் கொடுக்க வந்தவர்கள் பற்றி குறிப்பிட்டார்.
 
கர்நாடக அரசுக்கும், உம்ரா டெவலப்பர்கள் நிறுவனத்திற்கும் இடையிலான இந்த வழக்கில், ஒருதரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கும்படி ஒருவர் தன்னை வீட்டில் வந்து சந்தித்ததாகவும், ஆனால் அவரை தான் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் நீதிபதி முகர்ஜி தெரிவித்துள்ளார்.