1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (17:05 IST)

சிகரெட் கேட்டு கைதிகள் போராட்டம்? நடிகர் தர்ஷனால் கர்நாடக சிறையில் பரபரப்பு..!

நடிகர் தர்ஷன் சிறையில் இருக்கும் போது சிகரெட் பயன்படுத்திய புகைப்படம் இணையத்தில் வைரலானதை அடுத்து தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறை ஒன்றில் கைதிகள் சிகரெட் கேட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹிண்டலகா மத்திய சிறையில் கைதிகள் திடீரென போராட்டம் நடத்திய நிலையில் போராட்ட கைதிகள் தர்ஷன் இருக்கும் பெங்களூர் சிறையில் மட்டும் சிகரெட் அனுமதிக்கப்பட்டுள்ளது, தேநீர் அருந்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆனால் எங்கள் சிறைக்கு ஏன் அனுமதி வழங்கப்படவில்லை,  என கூறி போராட்டம் நடத்தியதாக தெரிகிறது.

ஹிண்டலகா மத்திய சிறையில் சிகரெட் மற்றும் புகையிலை கேட்டு கைதிகள் போராட்டம் நடத்திய தகவல் வெளியானவுடன் சிறை அதிகாரிகள் கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடும்படி கூறியுள்ளனர் என கூறப்படுகிறது.

 மேலும் சிகரெட் உள்ளிட்ட பொருள்கள் கிடைக்கும் வரை உணவு சாப்பிட மாட்டோம் என்று கைதிகள் கூறியதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் இது போன்ற போராட்டம் எங்கள் சிறையில் நடைபெறவில்லை என்றும் சமூக வலைதளங்களில் எழுப்பப்படும் வதந்தி என்றும் ஹிண்டலகா சிறையின் வடக்கு மண்டல தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

Edited by Siva