வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 18 டிசம்பர் 2019 (18:49 IST)

முடியலடா சாமி... நித்தியை பிடிக்க சிபிசி உதவியை நாடும் கர்நாடகா போலீஸ்!

நித்யானந்தாவை கண்டுபிடித்து தரக்கோரி டெல்லி சிபிஐக்கு கர்நாடகா போலீசார் கடிதம்.
 
தனது ஆசிரமத்தில் சிறார்களை துன்புறுத்துவதாக நித்யானந்தா மீது தொடுக்கப்பட்ட வழக்கில் போலீஸார் நித்யானந்தாவை தேடிக் கொண்டிருக்க, அவரோ ஜாலியாக நாளுக்கு ஒரு வீடியோ மூலம் தனது சிஷ்யர்களுடன் பேசி வருகிறார்.
 
நித்தியானந்தாவை பிடிக்க பெங்களூர் நீதிகமன்றம் கர்நாடக போலீசுக்கு கெடு விதித்துள்ளது. ஆனால், நித்தியானந்தா குறித்து எந்த தகவலும் தெரியாததால் நித்யானந்தாவை கண்டுபிடித்து தரக்கோரி டெல்லி சிபிஐக்கு கர்நாடகா போலீசார் கடிதம் எழுதியுள்ளது. 
 
அதோடு புளு கார்னர் முறையில் இன்டர்போல் போலீசுக்கும் நித்யானந்தாவை கண்டுபிடித்து தரக்கோரி கர்நாடகா காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.