புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : சனி, 11 ஜூன் 2022 (12:25 IST)

அதிகரித்து வரும் கொரோனா; முகக்கவசம் அணிவது கட்டாயம்!

கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதலாக கொரோனா பாதிப்புகள் இருந்து வரும் நிலையில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்தன.

சில காலம் முன்னதாக 2 ஆயிரமாக பதிவான தினசரி கொரோனா பாதிப்புகள் தற்போது 8 ஆயிரத்தை தொட்டுள்ளது. இதனால் கொரோனா அதிகமாக உள்ள பகுதிகளில் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வியகம், உணவகம் என அனைத்து இடங்களிலும் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.