வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (07:59 IST)

தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க கூடாது. இரவு முழுவதும் தீப்பந்தம் ஏந்தி கர்நாடக விவசாயிகள் போராட்டம்..!

தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என கர்நாடக மாநில விவசாயிகள் கே.ஆர்.எஸ் அணை முன்பாக இரவு முழுவதும் கையில் தீப்பந்தம் ஏறி போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
 
இந்த நிலையில் தமிழக அரசியல்வாதிகள் மற்றும் தமிழக அரசு கர்நாடக அரசை தொடர்ந்து தண்ணீர் வர வலியுறுத்தி வரும் நிலையில் கர்நாடகாவில் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 
 
குறிப்பாக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் நேற்று இரவு திடீரென போராட்டம் நடத்தினர்.  கே.ஆர்.எஸ் அணையிலிருந்து தமிழகத்திற்கு நேற்று 7329 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் கே.ஆர்.எஸ்  அணை முன்பு இரவு முழுவதும் கைகள் தீப்பந்தம் கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் 
 
விவசாய கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தர்ஷன் புட்டனய்யா தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.
 
Edited by Siva