திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 நவம்பர் 2021 (14:38 IST)

அமேசான் ஆர்டர்கள் அபேஸ்; வண்டியோடு கம்பி நீட்டிய டிரைவர்! – கர்நாடகாவில் பரபரப்பு!

கர்நாடகாவில் அமேசான் ஆர்டர் பொருட்களை வண்டியோடு கடத்தி செல்ல முயன்ற டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் ஆன்லைன் மூலமாக பொருட்கள் விற்கும் தளங்களில் அமேசான் முக்கியமானதாக உள்ளது. நாள்தோறும் இதில் லட்சக்கணக்கான மக்கள் பொருட்களை ஆர்டர் செய்து பெறுகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவில் கோலார் பகுதியில் டெலிவரிக்காக 1.64 கோடி மதிப்புள்ள அமேசான் பொருட்கள் ட்ரக்கில் அனுப்பப்பட்டுள்ளன.

அந்த பொருட்களை கடத்தி வெளியில் விற்க திட்டமிட்ட டிரைவர் ட்ரக்கோடு பொருட்களை திருடி சென்றுள்ளார். இந்நிலையில் தப்பி சென்ற டிரைவர் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கடத்திய பொருட்களை 1 கோடி ரூபாய்க்கு வெளியே விற்க திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.