அந்த பெண்ணுக்கு நக்சல் தொடர்பு உள்ளது! – எடியூரப்பா உறுதி!
சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கத்திய பெண்ணுக்கு நக்சல்களுடன் தொடர்பு இருப்பதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நேற்று குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஓவைசி கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பேசிய பெண் ஒருவர் திடீரென ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
அமுல்யா என்ற அந்த பெண்ணின் பேச்சுக்கு ஓவைசி கண்டனங்கள் தெரிவித்ததோடு, தங்கள் கட்சிக்கும் அந்த பெண் பேசியதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார். இந்நிலையில் அந்த பெண் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, அமுல்யாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும், அவருக்கும் நக்சல் அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.