புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

மேகதாது பிரச்சனைக்காக டெல்லி செல்லும் கர்நாடக முதல்வர்!

bommai
தமிழக மற்றும் கர்நாடக மாநிலத்துக்கு இடையே கடந்த பல ஆண்டுகளாக மேகதாது பிரச்சனை இருந்து வருகிறது 
 
இந்த நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அடுத்ததாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று டெல்லி செல்கிறார்.
 
அவருடன் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோள் என்பவரும் டெல்லி செல்கிறார். டெல்லியில் மத்திய அமைச்சரை சந்தித்து கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்ட அனுமதி பெற முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது