அஜித் போல் அரசியல் வதந்திக்கு பதில் கூறிய நடிகை ...
நடிகர் சயீஃப் அலிகானின் மனைவி கரீனா கபூர் . இவர் பாலிவுட் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் என்பதால் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். சயீப் அலிகான் நவாப் அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது ஊரில் (போபால்) அவருக்கு மக்கள் செல்வாக்கு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அடிக்கொருமுறை போபால் சென்று வரும் கரீனா கபூர் வரும் லோக்சபா தேர்தலில் போபால் தொகுதியில் போட்டியிடப்போகிறார் என்று தகவல் வெளியானது.
இது குறித்து பதிலளித்த நடிகை கரீனா கபூர் கூறியதாவது:
’நான் அரசியலில் நிற்கப் போவதாக வெளியான செய்திகள் எதுவும் உண்மையில்லை’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். ’