1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (18:10 IST)

வணிக வளாகங்கள், கடைகளின் பெயர்ப் பலகைகளில் கன்னட மொழி 60 சதவீதம் கட்டாயம்!

கர்நாடகம் மாநிலத்தில் உள்ள வணிக வளாகங்கள், கடைகளின் பெயர்ப் பலகைகளில் கன்னட மொழி  60 சதவீதம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்ற மசோதா அம்மாநில மேலவையில்  நிறைவேறியுள்ளது.
 
நமது அண்டை மாநிலமான கர்நாடத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகளில் கன்னடமொழி 60 சதவீதம் இடம்பெற வேண்டும் என்ற மசோதாவை இன்று அம்மாநில சட்டப்பேரவையின் மேலவையில் நிறைவேறியது.
 
சட்டப்பேரவையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு,ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு சட்டமாகும்.
 
இந்தச் சட்டத்தை  யாரேனும் மீறினால் கடைகளின் உரிமம் ரத்தாகும் வகையில் இச்சட்டத்தின் ஷரத்துகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.