வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (17:55 IST)

மூத்த பாதுகாப்பு ஆலோசகர் கே விஜயகுமார் தனிமைப்படுத்தல்: பரபரப்பு தகவல்

மூத்த பாதுகாப்பு ஆலோசகர் கே விஜயகுமார் தனிமைப்படுத்தல்
சந்தன கடத்தல் வீரப்பனை பிடித்ததன் மூலம் தமிழகம் முழுவதும் புகழ் பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே விஜயகுமார் அவர்கள் சமீபத்தில் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு விவகார அமைச்சராக பொறுப்பேற்றார் என்பது தெரிந்ததே
 
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மூத்த ஆலோசகராக தற்போது அவர் பணியாற்றும் கொண்டு வருகிறார். அதுமட்டுமன்றி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பான விவரங்களையும் விஜயகுமார் கண்காணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சமீபத்தில் கொரோனா பாதித்த மருத்துவர் ஒருவருடன் கே விஜயகுமார் தொடர்பில் இருந்ததாகவும் இதனை அடுத்து மூத்த பாதுகாப்பு ஆலோசகர் விஜயகுமார் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
அதேபோல் சிஆர்பிஎஃப் படையின் மருத்துவர் ஒருவருக்கும் கொரோனா உறுதியானதை அடுத்து சிஆர்பிஎஃப் இயக்குனர் மகேஸ்வரி அவர்களும் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது