திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 மே 2022 (08:21 IST)

ஜோத்பூர் வன்முறை சம்பவம்; மே 6 வரை ஊரடங்கு! 140 பேர் கைது!

Jodhpur
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரம்ஜான் அன்று ஏற்பட்ட கலவரங்களை தொடர்ந்து மே 6 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரம்ஜான் அன்று கொடி ஏற்றுவதில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் வன்முறை வெடித்தது.

இதையடுத்து அங்கு கண்ணீர் புகைக்குண்டு வீசி கலவரம் செய்தவர்களை போலீஸார் விரட்டினர். இதனால் அங்கு பதற்றம் எழுந்துள்ள நிலையில் அப்பகுதி முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டதுடன், 144 ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

தற்போது இந்த ஊரடங்கு உத்தரவு மே 6 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் தேர்விற்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலக பணியாளர்களுக்கு ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.