ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பேட்டி..!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் எப்போது என்பது குறித்த தகவலை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர் சட்டமன்றத் தேர்தல் நடைபெறாத நிலையில் எதிர்க்கட்சிகள் இதுகுறித்து அவ்வப்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று தேர்தல் ஆணையத்தின் குழு ஆய்வு செய்தது.
அதன் பின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பேட்டி அளித்த போது ஜம்மு-காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்றும் எந்தவித உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் தேர்தலை சீர்குலைக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
ஜனநாயக முறைப்படி மக்களவைத் தேர்தலை ஜம்மு காஷ்மீரில் நடத்தியது போலவே சட்டசபை தேர்தல் நடத்த இருக்கிறோம் என்றும் அவர் கூறினார். இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran