வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 21 ஜனவரி 2019 (08:33 IST)

அடேங்கப்பா!!! இஷா அம்பானியின் தாலி விலை இத்தனை கோடியா!!!

இஷா அம்பானியின் தாலி விலை எவ்வளவு என்பது குறித்த விவரம் வெளியாகி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகளவில் பணக்காரார்கள் வரிசையில் இருப்பவர் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ்  அம்பானி . இவரின் மகள்  இஷா – ஆனந்த் பிரமால் திருமணம் சமீபத்தில் மும்பையில் மிகப்பிரமாண்டமாக நடந்தது.
 
இந்த திருமண நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப், மத்திய அமைச்சர் ராஜ்நாத் மற்றும் சச்சின், அமிதாப், ரஜினி உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்து முறைப்படி வேத முழக்கத்துடன் சடங்கு சம்பிரதாயங்களுடன் திருமணம் நடைபெற்றது.

ஆசியாவிலேயே விலை உயர்ந்த திருமணம் என சாதனையை இத்திருமணம் பெற்றுள்ளது. திருமணத்திற்காக ரூ.700 கோடி செய்யப்பட்டது என கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் இஷாவின் தாலி மதிப்பு விவரம் தற்பொழுது வெளிவந்துள்ளது. தாலியின் மதிப்பு 90 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.