செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 10 நவம்பர் 2023 (17:30 IST)

''இதேநிலை தொடர்ந்தால் ஜனநாயகம் சாத்தியமா?'' ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிறைவேற்றிய மசோதாக்களை எவ்வாறு கிடப்பில் போட முடியும்? இதே நிலை தொடர்ந்தால் நாடாளுமன்றக் கொள்கை அடிப்படையில்    ஜனநாயகம் சாத்தியமா? என்று பஞ்சாப் ஆளுநருக்கு உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவத் மான்  தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இம்மாநிலத்தில் ஆளுனராக பவாரிலால் புரொஹித் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பஞ்சாப் ஆளுனருக்கு எதிராக பஞ்சாப் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில்,   மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிறைவேற்றிய மசோதாக்களை எவ்வாறு கிடப்பில் போட முடியும் என உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ''நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள். இந்த விவகாரம் மிகவும் ஆபத்தானது.  இதே நிலை தொடர்ந்தால் நாடாளுமன்றக் கொள்கை அடிப்படையில்    ஜனநாயகம் சாத்தியமா'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.