புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 6 டிசம்பர் 2021 (11:02 IST)

இந்தியாவில் பூஸ்டர் டோஸ் அவசியமா?

இந்தியாவில் பூஸ்டர் டோஸ் செலுத்துவது தொடர்பாக வல்லுநர் குழு இன்று கலந்து ஆலோசிக்கிறது. 

 
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி தேவை என கூறப்பட்டு வருகிறது. சீரம் நிறுவனமும் பூஸ்டர் தடுப்பூசி தயாரிக்க அனுமதி கோரியுள்ளது. 
 
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ் செலுத்துவது தொடர்பாக வல்லுநர் குழு இன்று கலந்து ஆலோசிக்கிறது. அதே போல தேசிய நோய் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனை குழுவும் பூஸ்டர் டோஸ் செலுத்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 
 
மேலும் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கு பதிலாக தேவைப்படுவோருக்கு மட்டும் செலுத்துவது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.