1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 11 மே 2018 (16:55 IST)

ஐபிஎல் சூதாட்ட வழக்குகளை விசாரித்து வந்த ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை!

ஐபிஎல் சூதாட்டம் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஹிமான்ஷூராய் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மகாராஷ்டிரா மாநில காவல்துறையில் கூடுதல் டிஜிபியாக இருப்பவர் ஹிமான்ஷூராய். இவர் 2013ஆம் ஆண்டு ஐபிஎல் சூதாட்ட வழக்கு, பத்திரிகையாளர் கே டே கொலை வழக்கு, வழக்கறிஞர் பல்லவி கொலை வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளை விசாரித்து வந்தார்.
 
இவர் புற்றுநோய் காரணமாக நீண்ட மருத்துவ விடுப்பில் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று தெற்கு மும்பையில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 
 
இவரது இந்த தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் 2015ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்புப்படை தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்ட போது, மூத்த அதிகாரிகளுக்கு அரசு உரிய மரியாதை அளிக்கவில்லை என்று பிரதமருக்கு கடிதம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.