திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வியாழன், 1 பிப்ரவரி 2024 (12:30 IST)

இடைக்கால பட்ஜெட் 2024: நேரலை! Interim Budget 2024: Live Updates!

ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் அங்கன்வாடி ஊழியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு விரிவுபடுத்தப்படும்

9 வயது 14 வயது பெண்களுக்கு கர்ப்பப் பை புற்றுநோய் தடுப்பூசி போடப்படும்

நாட்டில் புதிய மருத்துவ கல்லூரிகள் கட்டப்படும்; தடுப்பூசி திட்டங்கள் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படும்


விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்துவோம்; உலகின் மிகப் பெரிய பால் உற்பத்தி நாடு இந்தியா.

1 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக்கப்பட்டு வருகின்றனர் 5 ஒருங்கிணைந்த அக்வா பூங்காக்கள் அமைக்கப்படும் 9 கோடி பெண்களை உள்ளடக்கிய 83 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்படுகின்றன

விமான நிலையங்கள் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்

கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது; பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்

நாட்டின் விமான நிலையங்கள் எண்ணிக்கை 149 ஆக உயர்த்தப்படும். புதிய சாலை, ரயில் திட்டங்களுக்கான 3 முக்கிய வழித்தடங்கள் அமைக்கப்படும்.

பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கத்துக்கு முன்னுரிமை 3 பிரதான ரயில்வே வழித்தடங்கள் அமைக்கப்படும் 40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக மாற்றப்படும்

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக்கப்படுவர் தொழில் தொடங்க வட்டியில்லான கடன் வழங்க ரூ1 லட்சம் கோடியில் நிதியம் தொடங்கப்படும்

இந்திய விமான நிறுவனங்கள் 1,000 புதிய விமானங்களை கொள்முதல் செய்ய உள்ளன

மின்சார வாகனங்கள் உற்பத்தி, பயன்பாடு ஊக்குவிக்கப்படும்

லட்சத்தீவில் சுற்றுலா மேம்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

சுற்றுலா மேம்பாட்டுக்காக மாநிலங்களுக்கு வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்படும்

மாநிலங்களுக்கு வட்டி இல்லா கடனாக ரூ1.3 லட்சம் கோடி வழங்கப்படும்

நாட்டின் நிதிப் பற்றாக்குறை 5.8% ஆக இருக்கும்- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாட்டின் நேரடி வரி வருவாய் அதிகரிப்பு வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 8 கோடிக்கும் அதிகம் - நிர்மலா சீதாராமன்

வருமான வரி உச்சவரம்பு ரூ. 2.5 லட்சத்தில் இருந்து ரூ7 லட்சமாக அதிகரிக்கப்பட்டது

ரூ11.75 லட்ச கோடி கடன் வாங்குவதற்கு திட்டம் மாதம் ஜிஎஸ்டி சராசரி வசூல் ரூ 1.66 லட்சம் கோடி

நாட்டின் வரி விகிதங்களில் எந்த ஒரு மாற்றமும் இல்லை

58 நிமிடங்களில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை வாசித்து முடித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்