1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha priya
Last Modified: சனி, 5 ஏப்ரல் 2014 (13:27 IST)

பாதிக்கப்பட்ட பெண்ணின் காலை தொட்டு மன்னிப்பு: இளம்பெண் தீயிட்டு தற்கொலை

மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு கிராமத்து பஞ்சாயத்தில்,  பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியவரை காவல் துறையில் ஒப்படைக்காமல், பாதிக்கப்பட்ட பெண்ணின் காலை தொட்டு மன்னிப்பு கேட்கவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்து போன அந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேற்கு வங்கத்தில் உள்ள பிர்பம் மாவட்டத்தின் சுபால்பூர் கிராமத்தை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், 22 வயது நபரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார். 
 
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காவல் துறையில் புகார் அளிக்க சென்றப்போது, அவரை தடுத்த கிராமத்தினர், பஞ்சாயத்தின் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காணலாமென கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணின் காலை தொட்டு மன்னிப்பு கேட்டபின் அந்த நபரை விடுவித்தனர்.
 
இதனால் மனமுடைந்து போன அப்பெண் தீயிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இச்சம்பவத்தை அடுத்து பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.