1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By caston
Last Updated : வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (13:21 IST)

இந்திராணி முகர்ஜியின் மகள் கொலை செய்யப்பட்ட போது கர்ப்பமாக இருந்தாரா?

பிரபல ஷீனா போரா கொலை  வழக்கில் மும்பை காவல் துறையினர்  தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.  இதில் பல திடுக்கிடும் தகவல்கள் இன்று  வெளியாகியுள்ளன தாயார் இந்திராணி  முகர்ஜியால் அவரது மகள் ஷீனா  கொலை செய்யப்படும் போது அவர்  கர்ப்பமாக இருந்தார் என காவல்துறை  தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷீனா சில மாதங்கள் கர்ப்பமாக  இருந்ததாகவும், ஸ்டார்  இந்தியா முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி  பீட்டர் முகர்ஜியின் மனைவி  இந்திராணியின் நெருங்கிய ஒருவர் தான்  இந்த கர்ப்பத்துக்கு காரணம் என காவல்  துறையின் அறிக்கை தெரிவிக்கின்றன.

அந்த நபர் தாய்லாந்தில் ஷீனாவுடன் நெருக்கமாக சில காலம் இருந்ததாகவும்,  தொடக்கத்தில் இது பற்றி தெரியாத  இந்திராணி பின்னர் விஷயம் அறிந்து அவர்களின் உறவை எதிர்த்ததாகவும் கூறப்படுகிறது.அந்த நபருக்கு ஷீனா இந்திராணியின் தங்கை அல்ல மகள் தான் என்பது  தெரியாது. இந்த கொலை குடும்ப பகை,  துரோகம், மனித உரிமை மீறல் என பல  மர்மம் நிறைந்த கதைகளாக  தொடர்கின்றன. மும்பை காவல் துறை கமிஷனர்  ராகேஷ் மரியா 2012 ஏப்ரல் 24 அன்று  ஷீனா கொலை செய்யப்பட்டார் என்றும்  மே மாதம் 23ம் தேதி இந்திராணியின்  கார் ஓட்டுனர் ஷியாம் ராய் மூலம்  அவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது என  தெரிவித்தார்.

இந்திராணி மற்றும் அவருடைய  ஓட்டுனரை ஆகஸ்ட் 31 வரை காவலில்  எடுத்து விசாரிக்க நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.