திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 ஜூன் 2022 (18:06 IST)

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்

Indian Rupee
கடந்த சில நாட்களாக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து கொண்டே இருக்கும் நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் வரலாறு காணாத வகையில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சுதந்திரம் வாங்கிய போது சமமாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் படிப்படியாக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது என்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து கொண்டே சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு அமெரிக்க டாலருக்கு 40 முதல் 45 ரூபாய் வரை இருந்த இந்திய ரூபாய் மதிப்பு கடந்த சில வருடங்களாக கிடுகிடுவென உயர்ந்து தற்போது 70 ரூபாய்க்கும் அதிகமாக வந்து விட்டது
 
இன்றைய வர்த்தக முடியும்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூபாய் 77.81 எனவீழ்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது