வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 21 மார்ச் 2016 (06:52 IST)

ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த லஷ்கர்-இதொய்பா சதி :உளவுத்துறை எச்சரிக்கை

இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை கூறியுள்ளது.


 

 
காஷ்மீர் பிரிவு தலைவர் அபு துஜானாவிற்கும் லஷ்கர்-இ-தொய்பாவின் தீவிரவாதிகள் சிலருக்கும்  இடையே நடந்த தொலைபேசி உரையாடலை உளவுத்துறை இடைமறித்துக் கேட்டது.
 
இந்த உரையாடலில் துஜானாவுடன் 10 தீவிரவாதிகள் இணைந்து காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
 
அத்துடன், ராணுவ வீரர்களின் ஆயுதங்களை கைப்பற்றும் தீவிரவாதிகளுக்கு தலா ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று லஷ்கர- இ-தொய்பா கூறியுள்ளதாக உளத்துறை கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.