1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 நவம்பர் 2021 (10:47 IST)

தனியார் கிரிப்டோ கரன்சிக்கு தடை! – நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்?

தனியார் கிரிப்டோ கரன்சிகளை இந்தியாவில் தடை செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் க்ரிப்டோ கரன்சி என்னும் டிஜிட்டல் கரன்சியின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. பல நாடுகளிலும் பலர் பிட்காயின் உள்ளிட்ட பல்வேறு க்ரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவிலும் க்ரிப்டோ கரன்சி பயன்பாடு அதிகரித்துள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடி மேற்கொண்ட ஆலோசனையில் க்ரிப்டோகரன்சி நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்பதாகவும், பயங்கரவாத செயல்பாடுகளுக்கு நிதி கிடைக்க வழி செய்வதாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் 29ம் தேதி தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடரில் இந்தியாவில் கிரிப்டோ கரன்சிகளை தடை செய்வதற்கான புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.