வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 17 ஜூன் 2020 (06:31 IST)

லடாக் எல்லையில் இந்திய, சீன படைகள் வாபஸ்: அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை

india china army.jpg
லடாக் எல்லையில் இந்திய சீன படைகள் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்களும் 43 சீன வீரர்களும் உயிரிழந்ததாக வெளியான தகவல் இரு நாடுகளை மட்டுமின்றி உலக நாடுகளையே பதட்டத்தில் ஏற்பட்டுள்ளது. இந்திய சீன நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் அது உலக போராக மாறும் அபாயம் இருப்பதால் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது
 
கொரோனாவால் லட்சக்கணக்கான மனித உயிர்கள் பலியாகி வரும் இந்த நேரத்தில் இந்த தாக்குதல் குறித்து தனது வருத்தத்தை ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்டர்ஸ் தெரிவித்துள்ளார். இருநாடுகளும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையை அணுக வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
இந்த நிலையில் லடாக் எல்லையில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் இந்தியா மற்றும் சீன படைகள் விலக்கி கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இருநாட்டு எல்லையில் பதற்றத்தை தணிக்கும் வகையில் இரு நாடுகளும் இணைந்து படைகளை விலக்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்து இருப்பதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவித்துள்ளது 
மேலும் இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகவும், லடாக் எல்லையில் இருந்து இந்திய சீன படைகள் வாபஸ் பெற்று உள்ளதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் பாங்காக் ஏரி, தவுலத் பெக் ஓல்டி உள்ளிட்ட இடங்களில் படைகள் வாபஸ் பெறப்படவில்லை என்றும் இந்த பகுதிகளிலும் விரைவில் வாபஸ் பெறப்படும் என்றும் கூறப்படுகிறது
 
இந்திய-சீன எல்லையில் இரு படைகளும் வாபஸ் பெற்று உள்ளதால் இரு நாட்டு எல்லையில் அமைதி திரும்பி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது