1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 12 ஜனவரி 2018 (10:16 IST)

100வது செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி!!

கடந்த ஆகஸ்டு மாதம் 31 ஆம் தேதி பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் மூலம் ஐஆர்என்எஸ்எஸ் 1-எச் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் அது தோல்வியை தழுவியது.
 
இந்நிலையில் கார்ட்டோசாட்-2 உள்பட 31 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட் மூலம் ஜனவரி முதல் வாரத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவெடுத்தது. 
 
அதன்படி இன்று இந்தியா தனது 100வது செயற்கைகோள் மற்றும் 2018 ஆம் ஆண்டின் முதல் செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
 
இந்த செயற்கைகோள் இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான கவுன்ட் டவுன் நேற்று காலை 5.29 மணிக்கு துவங்கியது. இந்த ராக்கெட்டில் இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், பின்லாந்து, கொரியா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள்கள் என மொத்தம் 31 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது.  
 
710 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பூமியின் இயற்கை வளங்களை படமெடுத்து அனுப்பும். இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இது, ஏவப்பட்ட 2 மணிநேரம் 21 நிமிடத்தில் பூமியிலிருந்து கிட்டத்தட்ட 505 கி.மீ உயரத்தில் புவியின் வட்டப்பாதையில் செயற்கைகோள் நிலை நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.