வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 8 அக்டோபர் 2021 (09:27 IST)

இன்று 89வது இந்திய விமானப் படை தினம் - மோடி வாழ்த்து

இன்று 89வது இந்திய விமானப் படை தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 
இந்தியப் பாதுகாப்புப் படையின் ஓர் அங்கமாக இந்திய விமானப் படை, 1932 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி இந்தியா ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் இருந்த போது உருவாக்கப்பட்டது. இந்திய விமானப்படைச் சட்டம் 1932-த்தின் படி பிரிட்டன் ராயல் விமானப் படையின் ஒரு பகுதியாக இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்டது. 
 
தொடக்கத்தில் பிரிட்டனின் சீருடை மற்றும் முத்திரைகளையே இந்திய விமான படையினரும் பின்பற்றினர்.  பின்னர் இது நாளடைவில் மாற்றப்பட்டது. இரண்டாம் உலக போரின் போது சப்பானிய பர்மா படையை தடுத்து நிறுத்தியதில் இந்திய விமான படைக்கு முக்கிய பங்கு உள்ளது. 
இந்திய விடுதலைக்கு பின்பு இந்திய பாதுகாப்பு படையின் ஓர் அங்கமாக இருந்த விமானப்படை தற்போது உலகின் நான்காவது பெரிய விமானப்படையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் இன்று 89வது இந்திய விமானப் படை தினம் கொண்டாடப்படுகிறது. 
 
இதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, விமனாப்படை தினத்தையொட்டி விமனப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள். நாட்டை பாதுகாப்பதிலும், சவாலான நேரங்களிலும் விமானப்படை வீரர்கள் சிறப்பாக செய்ல்படுகின்றனர் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.